(எம்.எம்.மின்ஹாஜ்)

கம் பெரலிய வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 21 ,22 ஆம் திகதிகளில் கிளிநொச்சி, முல்லை தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பெரலிய நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்கு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்கேற்கவுள்ளார்.

கம்பெரலிய வ‍ேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு குருநாகல் நிகவரட்டிய பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. இதன்படி இரண்டாம் கட்டம் வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.