பயணிகள் இணைய வழியாக பேருந்து ஆசனங்களை ஒதுக்கிக்கொள்ள வழிவகுக்கும் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் எஸ்.எல்.ரி.பி.எக்ஸ்பிரஸ் என்ற சேவையின் ஊடாக இந்த வசதி பொதுமக்களுக்கு கிடைக்கிறது.

இணைய வசதிகளைக் கொண்ட திறன்பேசிகள் அல்லது கணனியின் ஊடாக இதற்குரிய செயலியைப் பயன்படுத்தி கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பேரூந்துகளில் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இதன் மூலம் புறக்கோட்டை பஸ் நிலையத்திற்குச் சென்று தூர இடங்களுக்கான பஸ் சேவைகளில் ஆசனங்களை ஒதுக்கிக்கொள்வதற்கான பண விரயமும், நேர விரயமும் தவிர்க்கப்படுவதாக போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.