முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நியமித்துள்ளார் என சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடமிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு  என சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கையே கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக என்னை நியமித்துள்ளதாக மகிந்த ராஜபக்சவிடமிருந்து வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை முற்றிலும் தவறானது என கோத்தபாய தெரிவித்துள்ளார்.

மக்களையும் அரசியலில் தொடர்புபட்டவர்களையும் குழப்புவதற்கான சிலரின் நடவடிக்கையிது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.