36 ஆவது நாளாகவும்  எலும்புகள் அகழ்வு  பணி  தொடர்கிறது

Published By: Daya

18 Jul, 2018 | 09:34 AM
image

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை குறித்த அகழ்வு பணிகள்  இடம் பெற்று வருகின்றது.

இன்று காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் மேலும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மன்னார் 'சதொச' விற்பனை நிலைய கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக  இடம்பெற்று வருகின்றது.

  ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மற்றும் மனித மண்டையோடுகளை அகற்றும்  நோக்குடன் துப்பரவு செய்யும் பணி இடம் பெற்றுள்ளது.

 இது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளியேற்றப்பட்ட எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59