பௌத்த விகா­ரையின் உரு­வத்­தை ஆடையில் பொறித்­தி­ருந்த பெண்­ணொ­ரு­வரை வவு­னியா பொலிஸார் கைது செய்து விடு­வித்­துள்­ளனர்.

குறித்த சம்­பவம் வவு­னியா வைத்­தி­ய­சா­லையில் இடம்பெற்­றது. குறித்த பெண் தனது தாய் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­ வ­ரு­வ­தனால் அதனை பார்­வை­யி­டு­வ­தற்­காக நேற்­று­ முன்­தினம் வைத்­தி­ய­சாலை சென்­றுள்ளார். 

இந்­நி­லையில் அவர் அணிந்­தி­ருந்த ஆடையில் விகா­ரையின் தோற்றம் கொண்ட உருவம் பதிக்­கப்­பட்­டி­ருந்­த­தனால் வைத்­தி­ய­சாலை பொலிஸார் அவரை அழைத்து விசா­ரித்­த­துடன்  வவு­னியா அவ­ச­ர ­பொ­லி­ஸா­ருக்கு தகவல் வழங்­கினர். 

சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை வாக­னத்தில் ஏற்றி அழைத்து சென்­றி­ருந்­தனர். தேக்­க­வத்­தை ­ப­கு­தியை சேர்ந்த 35 வயதுடைய குடும்­பப் பெண்ணே பொலி­ஸாரால் அழைத்­து­ செல்­ல­ப்பட்­டி­ருந்தார். இவர்  கடந்­த­ வா­ர­ம­ள­விலே இந்­தி­யாவில் இருந்து இலங்­கை ­வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்நிலையில் குறித்த பெண் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.