இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக கடத்தவிருந்த சுமார் 304 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவுடன் மூவரை கைதுசெய்துள்ளதாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின், உச்சிப்புளி அருகே சீனியப்பாதர்ஹா கடற்பகுதியில் வைத்தே இவர்கள் மூவரையும் கைதுசெய்த கியூபிரிவு பொலிஸார் இவர்களிடமிருந்து 304 கிலோகிரோம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதியானது இந்திய ரூபாவில் 50 இலட்சம் ஆகும்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.