துறைமுக நகர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

17 Jul, 2018 | 11:43 PM
image

(நா.தனுஜா)

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டமானது சூழலைப் பாதிப்பதுடன் இலங்கையின் வளங்களை சீனாவுக்கு விற்பதாகவும் அமைந்துள்ளது என துறைமுக நகரத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் தீபா சுபாஷினி தெரிவித்தார். 

கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிமுகத்திடலில் துறைமுக நகரத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தின் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

துறைமுக நகரம் இயற்கையான முறையில் அன்றி செயற்கையாக அமைக்கப்படுகின்றது. இது முற்றாக சூழலைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதோடு நாட்டை தாரைவார்த்துக் கொடுக்கும் திட்டமாகவும் அமைந்துள்ளது. மேலும் இத் திட்டத்தினூடாக துறைமுக நகரத்தின் கட்டுமானத்திற்கென மீனவக்கிராமங்கள் அழிக்கப்படுவதுடன் வளங்கள் சுரண்டப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வருவதற்கு முன்னர் துறைமுக நகர திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் நிறுத்துவதாக கூறினார். ஆனால் தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை மறந்து செயற்பட்டு வருகின்றார் என்றார்.

மேற்படி போராட்டத்தின் போது துறைமுக நகரத்தின் பாதிப்புக்கள் தொடர்பில் புத்திஜீவிகள் பத்து பேரின் கருத்துக்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டதுடன் 'துறைமுக நகரப்பணியை" நிறுத்து என எழுதப்பட்ட பட்டங்களை பறக்கவிட்டு தமது எதிர்ப்புக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51