யாழ்.கோட்டை பகுதியில் அகழ்வு ஆராய்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஆடிப்பிறப்பை முன்னிட்டு கோட்டை வைரவருக்கு பொங்கல் வைத்து வழிபாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ்.கோட்டை பகுதியில் அமெரிக்க பல்கலைகழகம், யாழ்.பல்கலைகழகம், தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிலையம் உள்ளிட்டவை இணைந்து அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந் நிலையில் இன்றைய ஆடிப்பிறப்பை முன்னிட்டு, கோட்டைக்குள் இருக்கும் வைரவர் ஆலயத்திற்கு முன்பாக பொங்கல் பொங்கி , கொழுக்கட்டை, மோதகம் அவித்து கூழ் காய்ச்சி வைரவருக்கு படைத்து வழிபாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.