(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது சிங்கப்பூரில் உள்ளார். ஆகையால் கூட்டு எதிர்க்கட்சியினர் சிங்கப்பூருடன் கைச்சாத்திட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடுவதில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை என  சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

 

சிங்கப்பூருடனான ஒப்பந்ததினூடாக குப்பை எடுத்து வரப்போவதாக கூறுகின்றனர். வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு குப்பை எடுத்து வர முடியாது. அப்படி எடுத்து வருவதற்கு சட்டத்தில் இடமில்லை. அப்படி குப்பை கொண்டு வர முடியுமாயின் எமக்கு சிங்கப்பூருக்கு குப்பை கொண்டு செல்ல முடியும். 

சிங்கப்பூருடனான ஒப்பந்ததினால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டு 15 வருடங்களுக்கு நாட்டை  இப்படியே வைத்துக்கொள்ளவே முற்படுகின்றனர். 

 இந்த ஒப்பந்ததினூடாக தொழிலாளர் வந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. தற்போது இதனை பேசும் போது மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரில் உள்ளார். ஆகவே இதற்கு மேல் பேசி ஒன்றும் பிரயோசனமில்லை என்றார்.