(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 

இச் சட்டமூலத்தினூடாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செய்யப்படவேண்டிய இழப்புக்கான எதிரீடுகள் (இழப்பீடு) தொடர்பிலான விதப்புரைகளை, காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல். 

மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து அல்லது பாதிப்பட்டவர்களின் பிரதிநிதிகளிடமிருந்து இழப்புகளுக்கான எதிரீடுகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல். இழப்பீடுகளை பெறுவதற்கு தகவுடைமையை மதிப்பீடு செய்தல். விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்தல் என்பது உட்பட மேலும் பல விடயங்கள் அலுவலகத்தின் தந்துவங்களும், பணிகளும் என்ற விடயத்தின்கீழ் அடங்குகின்றன.

எவரேனும்   இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு வேண்டுமென்றே பொய்யான தகவல்களை வழங்கினாலோ, அலுவலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் செயற்பட்டாலோ அவமதிப்புத் தவறொன்றுக்கு குற்றவாளியாக நேரிடும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சமாகும்.