மியாமியில் இடம்பெற்ற பெசன் நிகழ்ச்சியின் போது மொடல் அழகியொருவர் கட்வோக்கின் போது குழந்தைக்கு பால் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மியாமியில் இடம்பெற்ற வருடாந்த நீச்சல் உடை அழகிகள் போட்டியின் போது மரா மார்ட்டின் என்ற மொடல் அழகி கட்வோகில் ஈடுபட்டிருந்த வேளை தனது ஐந்து மாத மகள் அரியாவிற்கு பாலூட்டியுள்ளார்.

இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட 16 பேர்களில் ஒருவரான அவர் தங்கநிறத்தில் நீச்சல் ஆடை அணிந்தபடி குழந்தைக்கு பாலூட்டியபடி நடந்து வந்துள்ளார்.

கூடியிருந்தவர்களின் கூச்சல் குழந்தையை பாதிப்பதற்காக குழந்தைக்கு அவர் ஹெட்போனை பொருத்தியுள்ளார்.

தாய் ஒருவர் நடந்துபோகும்போது குழந்தைக்கு பாலூட்டுவதே எனது கதை என அவர் பின்னர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு பாலூட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் அவர் நடந்துகொண்டார் என பலர் அவரை பாரட்டியுள்ளனர்.

புத்துணர்ச்சி  ஊட்டும் விடயம் நாங்கள் உங்களை விரும்புகின்றோம் எனவும் துணிச்சலுடன் குழந்தைக்கு பால் ஊட்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதற்கு பாராட்டு எனவும் பலர் பாரட்டியுள்ளனர்.

அதேவேளை அவர் பிரபலமாவதற்காக இதனை செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.