கதிர்காமம் மாணிக்ககங்கையில் யானைகள் நீராடும் பகுதியில் இருந்து ஆறு அடி நீளம் கொண்ட முதலையொன்றை இன்று காலை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

கதிர்காமம் உற்சவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் கதிர்காமதிற்கு படையெடுத்துள்ளனர்.

இந்நிலையில் பக்தர்கள் நீராடும் பகுதிக்கு அருகிலிருந்த யானைகள் நீராடும் பகுதியில் இருந்து குறித்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது என்றும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் நீராடுமாறும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ள முதலையை யால வனப்பகுதியில் விட்டுள்ளதாக கதிர்காம வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.