உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூலம் தனக்குக் கிடைத்த மொத்த சம்பளத்தையும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் நலனுக்காக, பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே வழங்கி இருக்கிறார்.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் மோதின.

இப்போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதில் தொடரின் சிறந்த வீரராக 4 கோல்கள் அடித்த, 19 வயது கிலியன் எம்பாப்பே தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகையான ரூ 3.50 கோடியை, விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 இவரின் உண்ணதமான இச்செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதுடன், இவரின் இந்நன்கொடை  ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.