இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் முக்கியமானதுமான போட்டிய இன்று லீட்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந் நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றது. அதனையடுத்து லண்டனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரகமாக வெற்றியீட்டியது. இதனால் தொடர் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

ஆகையால் இன்று ஆரம்பமாகும் மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமான தொடரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற முக்கியமானதொரு போட்டியாகும்.

இருபதுக்கு 20 தொடரை ருஷித்த ஆர்வத்துடன் இந்திய அணியும் இப் போட்டியில் தொடரை இழந்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற பசியுடன் இங்கிலாந்து அணியும் இன்று களமிறங்குகின்றது.

அந்த வகையில் விராட் கோஹலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, தவான், ராகுல், சுரேஷ் ரய்னா, தோனி, ஹர்த்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், கவுல், சஹல், தினேஸ் கார்த்திக், ஐயர், புவனேஸ்வர்குமார், அக்ஷர் பட்டேல், சார்துல் தக்கூர் ஆகிய வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோசன் ரோய், ஜோனி பிரிஸ்டோ, ஜோய் ரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொஹின்  அலி, டேவிட் வில்லி, ரஷித், பிண்கட், மார்க் வூட், ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஜெக் பெல் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.