கொட்டில் அமைத்­தவர் கைது

Published By: Vishnu

17 Jul, 2018 | 08:34 AM
image

ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட சின்­ன­மு­கத்­து­வாரம் கடலை அண்­டிய பிர­தே­சத்தில் அரச திணைக்­க­ளங்­களின் முன் அனு­ம­தி­யின்றி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தாவ­ரங்­களை அழித்­த­துடன் மண்­மே­டு­களை சமப்­ப­டுத்தி சிறிய கொட்­டி­லையும் அமைத்த குற்­றச்­சாட்டில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

அத்­துடன் மண்­மேட்­டினை சமப்­ப­டுத்த பயன்­ப­டுத்­தப்­பட்ட டோசர் வாக­னமும் அக்­க­ரைப்­பற்று பொலி­ஸாரால் நேற்று காலை கைப்­பற்­றப்­பட்­டது.

குறித்த பிர­தே­சத்தில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் மண்­மே­டுகள் சமப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக பொது­மக்கள் வழங்­கிய தக­வலை அடுத்து அவ்­வி­டத்­திற்கு விரைந்த ஆலை­ய­டி­வேம்பு பிர­தேச செய­லக கரை­யோர பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் கே.எஸ். பாபுஜி மற்றும் காணி உத்­தி­யோ­கத்­தர்­களும் மண்­மேடு சமப்­ப­டுத்தும் பணியை இடை­நி­றுத்­தி­ய­துடன் குறித்த பணியை மேற்­கொள்­வ­தற்­கான கரை­யோ­ரப்­பா­து­காப்பு திணைக்­க­ளத்தின் அனு­மதிக் கடி­தத்­தினை சம்­பந்­தப்­பட்­ட­வ­ரிடம் கோரினர்.

ஆனாலும் குறித்த நப­ரிடம் எவ்­வித அனு­ம­தியும் இல்­லாத நிலையில் மண்­மேடு சமப்­ப­டுத்­தப்­பட்ட பகு­திக்­கு­ரிய உறுதி தன்­னிடம் இருப்­ப­தாக கூறி ஆவ­ணத்­தையும் காட்­டினார். ஆனாலும் குறித்த ஆவணம் தொடர்பில் ஆரா­யப்­பட வேண்டும் எனவும் எவ்­வா­றா­யினும் கடற்­க­ரையை அண்­டிய பகு­தியில் எக்­கா­ரியம் செய்­வ­தா­யினும் கரை­யோர பாது­காப்பு திணைக்­க­ளத்தின் முன் அனு­மதி பெறப்­பட வேண்டும் எனவும் உத்­தி­யோ­கத்­தர்­களால் தெரி­விக்­கப்­பட்­டது.

 இதே­வே­ளை­ அவ்­வி­டத்­திற்கு வருகை தந்த அக்­க­ரைப்­பற்று இரா­ணுவ உய­ர­தி­கா­ரி­க­ளி­டமும்  நிலைமை தொடர்பில் விளக்­கப்­பட்­டது.

விட­யத்தை  அறிந்து கொண்ட இரா­ணுவ உய­ர­தி­கா­ரிகள் அக்­க­ரைப்­பற்று பொலி­ஸா­ருக்கும் தக­வலை வழங்­கினர்.  

இந்­நி­லையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸார் மண்மேட்டினை சமப்படுத்த பயன்படுத் தப்பட்ட வாகனத்தை கைப்பற்றியதுடன் சாரதியையும் கைது செய்தனர்.

மேலும் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த சிறிய கொட்டிலையும் உடனடியாக அகற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01