உடல் எடை அதிகமாக உள்ளவர்களின் நினைவாற்றல் மற்றும் திறமை குறைவாக இருக்குமென அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வாளர்கள் 18 தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களின் நிறை அவர்களின் தினசரி ஞாபகசக்தி என்பவற்றை ஆய்வுக்குட்படுத்தினர்.

இதில் அதிக எடை கொண்டவர்களின் ஞாபகசக்தி குறைந்து காணப்பட்டது. அதிக எடை கொண்டவர்கள் அடிக்கடி உணவு சாப்பிட்டதால் அவர்கள் தமது சிந்திக்கும் திறனை இழந்துள்ளார்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குண்டானவர்கள் கற்பது மற்றும் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.