பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் உள்ளும் புறமும் அழ­கா­னவர் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். 

பிரித்­தா­னி­யா­வுக்கு விஜயம் செய்த  அவர்  வின்ட்ஸர் மாளி­கையில்  எலி­ஸபெத் மகா­ரா­ணி­யா­ருடன் (92  வயது)  மேற்­கொண்ட சந்­திப்பின்  பின்னர்   பிரித்­தா­னிய   ஊட­க­மொன்­றுக்கு  அளித்த பிரத்­தி­யேகப் பேட்­டியின் போதே  இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் மகா­ரா­ணியார்  அற்­பு­த­மான ஒருவர் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். அவ­ரது பேட்­டி­யா­னது நேற்று திங்­கட்­கி­ழமை  காலை  ஐ.ரி.வி. தொலைக்­காட்­சியின்  'குட் மோர்னிங் பிரிட்டன்'  நிகழ்ச்­சியில்  ஒளிப­ரப்­பப்­பட்­டது. 

"அவர்  அதி­க­ள­வான சக்­தி­யையும்  திட­காத்­தி­ரத்­தையும்  கூர்­மை­யையும் கொண்ட  அற்­பு­த­மான பெண். அவர் பிர­மா­த­மான ஒருவர். அவர் உன்­ன­த­மா­னவர். அவர் மிக மிக அழ­கா­னவர் என டொனால்ட் ட்ரம்ப்   தெரி­வித்தார்.

தான் அவ்­வா­றான அற்­பு­த­மான பெண்ணை  இறு­தியில் சந்­தித்­த­மையை  ஒரு கௌர­வ­மாக கரு­து­வ­தாக அவர் மேலும் கூறினார்.

"அவர்  (மகா­ரா­ணியார் ) வெளியே மட்டும் அழ­கா­னவர் அல்ல. அவர் அகத்­தேயும் புறத்­தேயும் அழ­கா­ன­வ­ராக உள்ளார். அவர் மிகவும் அழ­கா­ன­வரும் விசே­டத்­துவம் பொருந்­திய ஒரு­வ­ரு­மாவார்"   என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

2000  ஆம் ஆண்டில்  88  ஆவது வயதில் மர­ண­மான   தனது தாயா­ரான  மேரி ஆன் ட்ரம்ப்  எலி­ஸபெத்  மகா­ரா­ணி­யாரின்  ரசி­கை­யாக இருந்­த­தாக  அவர் தெரி­வித்தார்.

எலி­ஸபெத் மகா­ரா­ணியார்  தனது 66  வருட கால முடி­யாட்சி காலத்தில் அமெ­ரிக்­காவில் ஹாரி எஸ். ட்ரூமன்  முதல்  டொனால்ட் ட்ரம்ப் வரை 13  பேர் ஜனா­தி­பதி பத­வியை வகித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.