மனித உரிமை விடயங்களில் இலங்கை தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடு என கருதுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

உலகநாடுகளில் 2017 இல் காணப்பட்ட மனித உரிமை நிலவரம் குறித்த தனது அறிக்கையிலேயே பிரிட்டன் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின மனித உரிமை நிலவரங்களில் குறிப்பிட்டளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ள பிரிட்டன் சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அர்ப்பணிப்புகளில் முன்னேற்றம் ஏற்படாதது போன்ற விடயங்கள் குறித்து தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ள 30 நாடுகளில் இலங்கையும்  ஒன்று என பிரிட்டன் தெரிவித்துள்ளது