இந்தியாவின் இராமேஸ்வர பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் இலங்கையின் கச்சதீவுப் பகுதியில் தஞ்சமடைந்ததையடுத்து அவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி சேரங்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய வினோத் மற்றும் 25 வயதுடைய மஹராஜா ஆகிய இருவரும் தனுஸ்கோடி பகுதியில் இருந்து மிதவையை பயன்படுத்தி மீன் பிடிக்க சென்ற போது கடலில் ஏற்பட்ட திடீர் சூறைகாற்று காரணமாக கச்சதீவு பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் கச்சதீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் அவர்களை மீட்டு  இலங்கை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக கடலில் மிதவை மூழ்கியதால் நீந்தி கச்சத்தீவு  அடைந்ததாக தெரிவித்ததையடுத்து  ஒரு வார காலத்திற்குள் விமானம்  மூலம் தாயகம் திருப்பி அனுப்பி வைக்கபடவுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.