இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மூவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித் தடை விதித்துள்ளது.

இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்ஹ மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்ஹ ஆகியோருக்கே  சர்வதேச கிரிக்கெட் பேரவை குறித்த போட்டித் தடையை விதித்துள்ளது.     

இந்நிலையில் குறித்த மூவருக்கும் நான்கு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.