தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நகர பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் கடைகளை உடைத்துக்கொண்டிருக்கும் வேளையில் நகரத்தில் உள்ள சிலர் குறித்த நபரை மடக்கி பிடித்துள்ளனர்.

அதன்பின்னர், சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் 45 ரூபா பெறுமதியான பொருட்களும், பணத்தொகைகளும் பொலிஸார் மீட்டுள்ளனர். அத்தோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டன்பார் பகுதியை சேர்ந்தவர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நகை கடை ஒன்றும் பலசரக்கு கடைகள் இரண்டும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)