பின்லாந்து ஜனாதிபதியை சந்தித்தார் டிரம்ப் ; சற்று நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதியுடன் சந்திப்பு

Published By: Priyatharshan

16 Jul, 2018 | 04:22 PM
image

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் பின்லாந்து ஜனாதிபதி சவுலி நீனிஸ்டோவை சந்தித்து கலந்துரையாடினார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் உன் ஆகியோரின் சந்திப்புக்கு பின்னர், உலகம் உற்றுநோக்கும் மற்றொரு முக்கிய சந்திப்பாக டிரம்ப் - புட்டின் சந்திப்பு எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையே தற்போதும் பல விடயங்களில் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், டிரம்ப் - புட்டின் சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இன்னும் சிறிது நேரத்தில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேச இருக்கின்றனர். 

இதற்காக, ஹெல்சின்கி சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பின்லாந்து ஜனாதிபதி சவுலி நீனிஸ்டோவை சந்தித்தார். பின்லாந்தின் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சவுலியுடன் டிரம்ப் ஒன்றாக காலை உணவு அருந்தினார்.

இந்நிலையில், சோவியத் யூனியன் - அமெரிக்கா ஆகிய நாடுகளுகிடையேயான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக இடம்பெற்ற இடமான பின்லாந்தில் தற்போது ரஷ்யா - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் பின்னாலந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25