ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளிலிருந்து  ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஈரான் மீது முன்னெப்போதுமில்லாத அதிகபட்ச பொருளாதார அழுத்தத்தை செலுத்த அமெரிக்காக விரும்புவதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.