அங்குருவாதொட்ட, தொடங்கொட பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அதிகாரியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வேரவத்தை பகுதியிலுள்ள தங்குமிடமொன்றில் வைத்து இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 39 வயதுடைய நபரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம்  ஹெரணை தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்குருவாதொட்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.