தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டு பிறகு வாய்ப்பளிக்காதவர்களைப் பற்றி தன்னுடைய இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இது வரை தெலுங்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது தமிழ் திரையுலகில் தன்னை ஏமாற்றியவர்களைப் பற்றி பதிவிட்டு வருகிறார்.

இந்த பட்டியலில் தற்போது இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இணைந்திருக்கிறார்.

இது குறித்து அவருடைய இணையப்பதிவில், 

ஹைதராபாத்தில் அரண்மனை படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. அப்போது படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எமக்கு தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டார். யார் மூலமாகவோ என் தொலைப்பேசி இலக்கத்தைப் பெற்று எனக்கு அழைப்பினை ஏற்படுத்தினார்.

நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர் சியுடன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது எனது முகப்புத்தக நண்பர் செந்தில்குமாரையும் (ஒளிப்பதிவாளர்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு கதாநாயகி என்று எனக்கு வாக்குறுதி அளித்தார். 

அடுத்த நாள் தொலைப்பேசியில் அழைத்து என்னை நோவோடெல் ஹொட்டெலுக்கு வரச் சொன்னார். படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர் (கணேஷ்) மற்றும் சுந்தர் சியுடன் அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்குத் தெரியும்.. கணேஷ் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் எனக்கு உதவி செய்யவில்லை.’ என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகரும் இயக்குநருமான ராகவா லோரன்ஸ் ஆகியோரையும் குறிப்பிட்டிருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

இது குறித்து இயக்குநர் சுந்தரி சியிடம் கேட்டபோது,‘அவர் ( நடிகை ஸ்ரீ ரெட்டி)கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் வழக்கு தொடர்வோம்.’ என்றார்.

இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.