இலங்கையில் தொலைத்தொடர்பு துறையில் முதன்முறையாக எடிசலாட் லங்கா நிறுவனம் மொபைல் பாவனையாளர்களுக்காக IDD மற்றும் டேட்டா வசதிகள் இரண்டையும் ஒன்றில் உள்ளடக்கிய புதிய One IDDகார்ட்டை அறிமுகம் செய்கின்றது.

இது பிரதானமாக ஸ்மார்ட்போன் பாவிக்கும் IDD வாடிக்கையாளர்களை மையப்படுத்தி அறிமுகம் செய்யப்படுகின்றது. இது விசேட செக்கன் அடிப்படையில் கட்டணங்களைக் கொண்டுள்ளதால் கட்டணம் பற்றிய எந்தவித கவலையுமின்றி வாடிக்கையாளர்கள் தங்கள் உறவுகளுடன் அடிக்கடி கதைக்க முடியும். அத்துடன் இதில் கதைக்கும் நேரத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தக் கூடியதாயிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

97 ரூபா பெறுமதிமிக்க இந்த கார்டானது இதன் மூலம் 100 ரூபா பெறுமதிமிக்க IDD அழைப்புக்களையும் 25 ரூபா பெறுமதிமிக்க IDD SMS களையும் பகல் நேரத்திற்கு 300MB மற்றும் இரவு நேரத்திற்கு 100MB டேட்டா வசதிகளையும் மற்றும் வலையமைப்புக்குள் 10 உள்நாட்டு SMS களையும் பெற்றுக்கொள்ளலாம்.

எடிசலாட் லங்கா நிறுவனத்தின் பிரதம வணிக அதிகாரி யசீர் அபுல் அமயெம் கருத்து தெரிவிக்கையில் தொடர்பாடல் முக்கிய பங்கு வகிக்கும் நாளாந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கோ அல்லது தனிநபர் தேவைக்கோ தடைகளற்ற தொடர்பாடல் முறையொன்று மிக அத்தியாவசியமாகின்றது. மேலும் வெளிநாட்டுக்கான அழைப்பு வசதிகளையும் SMS வசதியையும் எடிசலாட் பெற்றுக்கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான கட்டணங்களையும் சேவைகளையும் வழங்க முன்வந்துள்ளது. எனவே இந்த புதிய கார்ட் ஊடாக அனைத்து வாடிக்கையாளர்களும் குறைந்த செலவில் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொள்கின்றனர் என்றார்.