கொழும்பு துறைமுக நகர் திட்டம் பல கோடி டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி 300 மில்லியன் டொலர் செலவில் உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா ஒன்றை இலங்கை அரசு நிர்மாணிக்கவுள்ளதாக ஜின்குவர செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டிக்கும், தெஹிவளைக்கும் இடையில் இந்த உலக தரம் வாய்ந்த கடற்கரை பூங்கா அமையவுள்ளது. இதற்கென அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதென மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்தார். 

அத்துடன் இது ஒரு செயற்கை கடற்கரை பூங்காவாக அமையவுள்ளதுடன் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவரும் என தெரிவித்த திட்ட பணிப்பாளர் டி.இ.சி. ஜெயக்கொடி, பாதுகாப்பான கடல் குளியல் உட்பட பல கடற்கரை பொழுது போக்கு அம்சங்களை இந்த கடற்கரை பூங்கா கொண்டு இருக்கும் என்றார்.