உயர்தர முன்னோடிப் பரீட்சை வினாப்பத்திரங்களுக்கான புள்ளி மதிப்பீடு செயற்வதற்கான விடைத் தாள்களை அனுப்புவதில் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அதிகாரிகள் தொடர்ந்தும் அலட்சியப் போக்குடன் செயற்பட்டு வருவதாக பாடசாலை நிர்வாத்தினர் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தினர் மேலும் தெரிவிக்கையில், 

மத்திய மாகாண கல்வி திணைக்களமானது மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள மொழி மூலம் பயிலும் சகல உயர்தர பாடசாலைகளுக்குமான வினா பத்திரங்களை தயாரித்து விநியோகிதது வருவதுடன் அவற்றுக்கான விடைத் தாள்களையும் வழங்கி வருகின்றது.

இருப்பினம்  தற்போது நடைபெறும் 2018 ஆம் ஆண்டுக்கான முன்னோடி பரீட்சை வினாப்பத்திரங்களுக்கான புள்ளி மதிப்பீடு செய்வதற்கான விடைத் தாள்களை அனுப்புவதில் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக உயர்தரத்தில் தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் விஞ்ஞான, இரசாயன, பெளதீகவியல், உயிரியல் மற்றும் தொடர்பாடலும் ஊடக கல்வியும் ஆகிய பாடங்களுக்குமான விடைத் தாள்கள் அனைத்தும் சிங்கள மொழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான நிலையல் சிங்கள மொழியிலுள்ள விடை  தாள்களை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்து மாணவர்களின் விடை தாள்களை மதிப்பீடு செய்வதில் தமிழ் பாடசாலையின் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே குறித்த பாடங்களுக்கான விடைத் தாள்களை தமிழ் மொழியில் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாதவாறு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.