யாழ். அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் முன்னோடி போட்டிகளில் ஒன்றாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. 

சரஸ்வதி சன சமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்றது, 

உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பலர் பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.