சீனாவிடமிருந்து எவ்வளவு பெற்றார் மகிந்த – அடுத்த வாரம் ஜே.வி.பி. தகவல்

Published By: Rajeeban

16 Jul, 2018 | 10:03 AM
image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து பெற்ற நிதிகள் குறித்த அனைத்து விபரங்களையும் பகிரங்கப்படுத்த போவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்

சீனாவிடமிருந்து மகிந்த ராஜபக்ச பெற்ற நிதியுதவி குறித்த அனைத்து விபரங்களையும் அடுத்த வாரத்திற்குள் அம்பலப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார். எழுத்து வடிவ ஆவணமாக இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பல உலகநாடுகள் சர்வாதிகாரத்தினால் அழிந்துள்ளன எனவும் ஜேவிபி தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதமே இலங்கையில் மிகவும் பிரபலமான அரசியலாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியமற்ற பல மோதல்கள் இடம்பெறும்,பகைமையுணர்வும் சந்தேகமும் நிலவும் நாடாக இலங்கை மாறக்கூடாது, என தெரிவித்துள்ள அவர் சர்வாதிகாரத்தினால் உருவாக்கப்பட்ட தேசம் எதுவுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,  

விஜ­ய­க­லா­வுக்கு எதி­ராக தெற்கை அணி திரட்­டு­வதும், வடக்­குக்கு எதி­ராக தெற்கை தூண்­டி­வி­டு­வதும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களை தூண்­டி­வி­டு­வதும் நாட்­டினை காப்­பாற்றும் கொள்­கை­யாக இன்று மாறி­யுள்­ளது. இந்த இன­வா­தத்தை தோற்­க­டிக்க வேண்டும்.

 இன்று மக்கள் மத்­தியில் உள்ள பிர­பல அர­சியல் இன­வா­த­மாகும். முஸ்லிம் மக்கள் மத்­தியில் முஸ்லிம் இன­வாதம், தமிழர் மத்­தியில் தமிழ் இன­வாதம், சிங்­க­ளவர் மத்­தியில் சிங்­கள இன­வாதம் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. இதனால் கடந்த காலங்­களில் நாம் பெற்­றுக்­கொண்ட நன்­மைகள் என்ன. ஆகவே இன ஐக்­கி­யத்தை உரு­வாக்கும் தலை­மை­களை உரு­வாக்க வேண்டும். மிகவும் முக்­கி­ய­மான தேவை­யாக இது உள்­ளது. இன்று நடை­மு­றையில் உள்ள அர­சியல் கலா­சா­ரத்­தினால் சமூ­கத்தில் முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது. 

ஆகவே  இந்த அர­சியல் கலா­சா­ரத்தை நாம் மாற்­றி­ய­மைக்க வேண்டும். இந்த சாக்­கடை அர­சி­யலில் இருந்து வெளி­வர வேண்டும். மாற்று சிந்­த­னை­களை உரு­வாக்க வேண்டும். வடக்­கிலும் தெற்­கிலும் பொது மக்­களின் இரத்தம் இந்த நாட்டில் படிந்துள்­ளது. இந்த நிலத்தில் அவர்­களின் இரத்தம் ஊறி­யுள்­ளது. இதனை உணர்ந்து நாம் மாற்றம் காண­வில்லை என்றால் நாம் மனி­தர்கள் என்ற அடை­யா­ளத்தை கூற முடி­யாது. 

இத்­தனை இழப்­பு­க­ளுக்கு பின்­னரும் நாம் மாற்றம் காண­வில்லை என்றால் நாம் வாழ்­வதில் அர்த்தம் இல்லை.  சர்­வா­தி­காரம் வேண்டும் என்ற கோரிக்கை பல்­வேறு நாடு­களில் எழுந்­தது. ஆனால் சர்­வாதி­காரம் மூல­மாக கட்­டி­யெ­ழுப்­ப­ப்பட்ட நாடு ஒன்றும் இல்லை. அரா­ஜக கொள்கை மூல­மாக கட்­டி­யெ­ழுப்பும் முயற்­சிகள் மட்­டுமே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கை­யிலும் அதுவே இன்று இடம்­பெற்று வரு­கின்­றது. நாட்­டை கட்­டி­யெ­ழுப்பும் கொள்கை என கூறிக்­கொண்டு நாட்­டை துண்­டு­போடும் கொள்­கையில் பல தலை­வர்கள் உரு­வாகி வரு­கின்­றனர். அதேபோல் பொரு­ளா­தார கொள்­கையும் எமது நாட்­டுக்கு ஏற்ற வகையில்  இல்லை. சீனா­வுக்கும், இந்­தி­யா­வுக்கும் நன்மை தரக்­கூ­டிய கொள்­கையே இங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. எமக்குக் கட­னையும் கொடுத்து இறு­தியில் நிலத்­தையும் அப­க­ரித்துக் கொள்­கி­ன்றனர். 

விஜ­ய­க­லா­வுக்கு எதி­ராக தெற்கை அணி­தி­ரட்­டு­வ­தையும், வடக்­குக்கு எதி­ராக தெற்கை தூண்­டி­வி­டு­வ­தையும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களை தூண்­டி­வி­டு­வ­தையும் நாட்­டினை காப்­பாற்றும் கொள்­கை­யாக கூறு­கின்­றனர். இதனை தோற்­க­டிக்க வேண்டும். அதேபோல் எமது தலை­வர்­களை சர்வதேசம் விலைக்கு வாங்கும் நிலைமையை தடுக்க வேண்டும். கடந்த கால தலைவர்கள் அனைவருமே சர்வதேச நாடுகளுக்கு விலை போய்விட்டார்கள். 

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் இன்னும் மறுத்ததாக மற்றும்  அதற்கான உறுதி யான ஆதாரங்களை முன்வைத்ததாக தெரியவில்லை. அவரால் அதனை நிராகரிக்க முடியாது. இந்த விவகாரம் குறித்து அடுத்த வாரம் பாராளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது  குறித்த காசோலை இலக்கம், மாற்றப்பட்ட வங்கி, யாருடன் சென்று மாற்றினார்கள் என்ற தகவல்களுடன் இந்த உண்மைகளை வெளிப்படுத்த நாம் தயார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56