வடக்கில் முகாம்களை மூட மாட்டோம்- இராணுவதளபதி

Published By: Rajeeban

15 Jul, 2018 | 07:43 PM
image

இலங்கையின் சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை போன்று வடக்கில் இராணுவமுகாம்களை மூடப்போவதில்லை என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொய்யான ஆதாரமற்ற  ஊடக தகவல்கள் காரணமாக மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் இராணுவதளபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாறாக இலங்கை இராணுவத்தின் கடந்த காலங்களையும், நாடு முழுவதும் தற்போது அது முன்னெடுத்துள்ள பணிகளையும் கருத்தில் கொண்டு மக்கள் படையினர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் இராணுவம் எடுக்காது,தேசிய பாதுகாப்பிற்கே அது முக்கியத்துவம் அளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் நாட்டிற்கான அர்ப்பணிப்பு குறித்து பொறமை கொண்டுள்ள சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும்,ஊடக நிறுவனங்களும், இராணுவத்தின் உரிய எண்ணிக்கையை தீர்மானிக்கும் நடவடிக்கை தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக தீயநோக்கம் கொண்ட பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையை பின்பற்றுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தை அதற்கு அவசியமான அளவு எண்ணிக்கை கொண்டதாக மாற்றும் நடவடிக்கைகள் நீண்ட காலமாக இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நிர்வாக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரை  அதிலிருந்து விடுவித்து களநடவடிக்கைகளிற்கு பயன்படுத்துகின்றோம்,இதன் மூலம் வினைத்திறனை இரட்டிப்பாக்குகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக படைமுகாம்களை நாங்கள் மூடுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10