கம்பளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 23 வயதுடையவர் எனவும் புஸல்லாவை பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று தனது ஆடைகளை பயன்படுத்தியே தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.