நவாஸ்ஷெரீப்பின் சகோதரர் உட்பட 1500 பேர் மீது பயங்கரவாத வழக்கு

Published By: Vishnu

15 Jul, 2018 | 05:34 PM
image

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் உட்பட 1500 பேர் மீது பொலிஸார் பயங்கரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் லண்டனிலிருந்து நேற்று முன்தினம் திரும்பிய இவர்கள் இருவரும் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக லண்டனில் இருந்து திரும்பும் அவர்களை வரவேற்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் லாகூர் விமான நிலையத்துக்கு பேரணியாக செல்ல தயார் நிலையில் இருந்தனர். ஆனால் லாகூர் நகரம் முழுவதையும் பொலிஸார் சீல் வைத்தனர்.

144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தும் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் குவிந்து லாகூர் விமான நிலையம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை அங்கு திரண்டு நின்ற பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நவாஸ்ஷெரீஃப் கட்சி தொண்டர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினார்கள். பொலிஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்தும் எரிக்கப்பட்டது.

இது தொடர்பாக நவாஸ் செரீப் கட்சி தொண்டர்கள் 1,500 பேர் மீது பொலிஸார் தீவிரவாத வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் நவாஸ் செரீப் தம்பியும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷாபாஸ் செரீப் மற்றும் முன்னாள் பிரதமர் ஷாகித் ஷாகித்கான் அப்பாசி உள்பட 20 தலைவர்களும் அடங்குவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25