(எம்.எம்.மின்ஹாஜ்)

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாளைமறுதினம் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. 

இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்ததின் பிரகாரம் சிங்கப்பூர் பிரஜைகளின் அத்துமீறிய தலையீடுகள் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும்  தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்நிலையிலேயே இது தொடர்பான விவாம் நாளைமறுதினம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக்கு சீனா நிதி வழங்கியதாக நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.