சட்டவிரோதமான முறையில் 2 கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 கள்ளு போத்தல்களுடன் சந்தேக நபரையும் இன்று எறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையிலேயே குறித்த கொள்கலன்கள் சிக்கியுள்ளன.

சைக்கிளில் இரு பக்கமும் குடி நீர் கலன்கள் காவிச் செல்வது போன்று இவை கட்டப்பட்டிருந்ததாக நிலையில் 2 கொள்கலன்களிலும் சுமார் 46 போத்தல் கள்ளையும் மீட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த சமபவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் ஏறாவூர் பொலிஸார் கைது செய்தள்ள நிலையில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.