பதுளை எலதலுவை பெருந்தோட்ட குடியிறுப்பு பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் பாரிய ஆலமரமொன்று சரிந்து விழுந்ததில் குடியிறுப்பின் ஒரு பகுதியும் தோட்ட காளியம்மன் ஆலயமும் முற்றாக சேதமாகியுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தமது குடியிருப்புத் தொகுதியின் மீது சரிந்து விழுந்துள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரியும் சேதமடைந்த குடியிருப்புத் தொகுதிக்கு பதிலாக புதிய வீடமைப்பு திட்டமொன்றை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கோரி பதுளை எலதலுவையில் இன்று பாதையை மறித்து டயர்களை எறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.