ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6 ஆவது உகல வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24 ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ரோம் பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோம் பியுமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரோம் சென்றடைந்த ஜனாதிபதியையும் 20 பேர் அடங்கிய தூதுக் குழுவினரையும் அந் நாட்டின் விசேட பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய நிறுவனமானது பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிப்பதனை நோக்காக கொண்டே இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. 

நாளைய தினம் இடம்பெறும் இந்த மாநாட்டின் கூட்டத் தொடரின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.