பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 130 அதிகரித்துள்ளதையடுத்து இன்று தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளதென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மஸ்தாங் மாவட்டத்தில் பலுசிஸ்தான் அவாமி கட்சியின் பேரணியை குறிவைத்து நேற்று முன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் அவாமி கட்சி வேட்பாளர் மிர் சிராஜ் ராய்சானி உள்பட 33 பேர் ப்லியானதாக முதலில் தகவல் வெளியானது. தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட போது பலி எண்ணிக்கை 128 ஆனது.

இந்நிலையில், மஸ்தாங் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.