களுபோவில பகுதியில் முச்சக்கர வண்டியினுள் மறைத்து வைத்து ஹெரோயினை கடத்திச் சென்ற ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 28 வயதுடைய கல்கிஸை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடமிருந்து 100 கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபர் இன்று கங்கோடவில நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.