ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கிளங்கன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியிருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 முச்சக்கரவண்டியில் பயணித்த இருவருக்கே படுங்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவர்கள் இருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணகளை நோர்வூட் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.