(நா.தனுஜா)

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தகவல் பெற வேண்டிய அவசியம் இராணுவத்தினருக்கு இல்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உரிய விதத்தில் செயற்படுத்துவோம் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமாகாண அரச அதிகாரிகள் இராணுவத்தினருக்கு எவ்விதமான தகவல்களையும் வழங்கக் கூடாது எனவும், அவ்வாறு வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுமாயின் தன்னிடம் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அரசியலில் ஈடுபடுபவர்கள் கூறுகின்ற இவ்வாறான கருத்துக்களை நாங்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அத்தோடு அவர்களிடம் தகவல்களை பெற வேண்டிய அவசியம் எதுவும் இராணுவத்தினருக்கு இல்லை.

அவருடைய கருத்திற்கு உரிய பதிலை அரசாங்கமே வழங்க வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பில் இராணுவத்தினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை உரிய வகையில் செயற்படுத்துவோம் என்றார்.