6ஆவது உலக வன வாரம் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ரோம் பயணம்

Published By: Daya

14 Jul, 2018 | 03:50 PM
image

ஐக்கிய நாடுகள் உணவு விவசாய நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 6ஆவது உலக வன வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் மாநாடு மற்றும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி  இன்று நண்பகல் ரோம் பயணமானார்.

பேண்தகு அபிவிருத்தி நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக வனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வனப் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை பலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் ஒருங்கிணைப்பை பலப்படுத்தவும் இம்மாநாடு விரிவான பங்களிப்பை வழங்குகின்றது.

உலக வன வாரம் புதிய அறிவு மற்றும் இது வரையில் அடையப்பெற்றுள்ள முக்கிய அடைவுகள் குறித்து உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கான சிறந்ததோர் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

இலங்கையின் வன அடர்த்தியை 29% – 32% வரை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள கொள்கை சார்ந்த தீர்மானங்கள் மற்றும் வன வளங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி  பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13