தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையகம் அப்பலோ வைத்தியசாலையில் ஆய்வு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி இந்த ஆய்வு இடம்பெறவுள்ளது.

ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக ஒரு தரப்பு தெரிவித்து வீடியோவை வெளியிட்டுள்ளது,மேலும் பல்வேறு தரப்பினரின்  சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்நிலையில் அவற்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்யவே இந்த ஆய்வு என  ஆணையகம் தெரிவித்துள்ளது.

அவரசசிகிச்சை பிரிவு உட்பட அப்பலோ வைத்தியாசாலையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர இதய நோய் சிகிச்சை பிரிவு, பல்வேறு சிக்கலான நோய் சிகிச்சை பிரிவு, வைத்தியசாலையின் 2ஆம் தளம், அரசு வைத்தியர்கள் இருந்த பகுதி, அமைச்சர்கள் இருந்த பகுதி, சசிகலா மற்றும் அவரை சார்ந்தோர் இருந்த பகுதி, ஜெயலலிதாவை ஸ்கேன் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பாதை,  உணவு சமைக்கப்பட்ட கூடம் ஆகிய 10 இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு அப்போலோ வைத்தியசாலை அனுமதிக்க விசாரணை ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் மைமுனா பாட்சா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ஆணைய வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ள இடங்களில் ஆய்வு செய்ய வைத்தியசாலை சார்பில் ஒத்துழைப்பு வழங்கப்படும். அங்கு எடுக்கப்படும் படங்களை ஆணைய விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி, ஆய்வின்போது அவரையும் உடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். விசாரணை ஆணைய வழக்கறிஞர்கள், வைத்தியசாலையில் ஆய்வு செய்ய ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

எனவே, இம்மாதம் 29ஆம் திகதி இரவு 7 முதல் 7.45 மணி வரை 45 நிமிடங்கள் விசாரணை ஆணைய சட்டதரணிகள் இருவர், சசிகலா தரப்பு சட்டத்தரணி அதிகபட்சம் இருவர், ஆணையத்தின் செயலாளர் , புகைப்பட கஞைர் உட்பட்டோர் முன்னிலையில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 

இவ்வாறு விசாரணை ஆணைய உத்தரவில் கூறப்பட்டுள் ளது.