நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் கொழும்பை அண்டிய பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

 இந்நிலையிலேயே களனி, பேலியகொட, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

மேலும் குறித்த  நீர் விநியோகத்தடை நாளை காலை 8 மணியில் இருந்து  16 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.