டில்லியில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸில் சிக்கிய பயணிகளை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 டில்லியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரெங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

டில்லியில் உள்ள மிண்டோ பாலத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. நேற்று மாலை அந்த பாலம் வழியாக சென்ற டில்லி போக்குவரத்து கழக பஸ் அதில் மூழ்கித் தத்தளித்தது.

குறித்த பஸ்ஸில்  8 பயணிகள் பயணித்தனர். 

பஸ் வெள்ளத்தில் மூழ்கியது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர்  வெள்ளத்தில் மூழ்கிய பஸ்ஸில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.