இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்திற்கு எதிராக இன்று யாழ்ப்பணாத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் அமர்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த அமர்விற்கு எதிராகவே காணாமல்போனவர்களின் உறவினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீரசிங்க மண்டபத்தின் முன்னாள் கூடியுள்ள  காணாமல்போனவர்களின் உறவினர்கள் நாங்கள் இந்த அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் மக்கள் எவரும் காணாமல்போனவர்கள்  அலுவலகத்தின் ஆணையாளர்கள் முன் சாட்சியமளிக்க செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை காணாமல்போனவர்களின் உறவினர்கள் வீரசிங்க மண்டபத்திற்குள் சென்று ஆணையாளர்கள் முன்னிலையிலும் தங்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுவருகின்றனர்