"கடு­மை­யான சட்­டங்­களை  அமுல்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை"

Published By: Daya

14 Jul, 2018 | 11:14 AM
image

(ஆர்.யசி)

நாட்டு மக்­களின் பொது நல­னுக்­காக குற்­றங்­களை தடுக்­கவும் சமூ­கத்தை நல்­வ­ழிப்­ப­டுத்­தவும் கடு­மை­யான சட்­டங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் தவ­றில்லை என இலங்­கையின் பிர­தான பெளத்த பீடங்­க­ளான அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க பீடங்கள் தெரி­வித்­துள்­ளன. 

பெளத்த கொள்­கையின் மேலா­திக்கம் இருந்த போதிலும் சமூக சிந்­த­னைக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்­டிக்­கட்­டி­யுள்­ளனர். 

போதைப்­பொருள் கடத்தல் மற்றும்  அத­னுடன் கூடிய பாரிய குற்­றங்­களை செய்யும் சிறைக் கைதி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­ப­டு­வது குறித்து சமூ­கத்தில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் பெளத்த பீடங்கள் இதனைக் குறிப்­பிட்­டுள்­ளன. 

இது தொடர்பில் அஸ்­கி­ரிய பீட ஆவ­ண­வாக்கல் அதி­காரி வன மெத­கம தம்­மா­னந்த தேரர் கூறு­கையில், 

நாட்டு மக்­களின் நலன்­களை கருத்தில் கொண்டு அவர்­களை பாது­காக்க சட்­டங்கள் தேவைக்­கேற்ப பிர­யோ­கிக்­க­பட வேண்டும். மன்னர் கால­மாக இருந்­தாலும் சரி அல்­லது நிகழ்­கால ஆட்­சி­யாக இருந்­தாலும் சரி அதில் மக்கள் நலன் சார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது   ஆட்­சி­யா­ளர்­களின் முதன்மை கட­மை­யாகும். 

குற்­றங்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுத்தால் மட்­டுமே நாட்­டுக்கு நன்­மை­யையும் மக்கள் மத்­தியில் அமை­தியும் ஒழுக்­கமும் உரு­வாகும். இந்த இடத்தில் பெளத்த தர்மம் என்­பதை விடவும் நாட்­டினை நல்­வ­ழிப்­ப­டுத்த பெளத்த தலை­மைகள் என்ன செய்ய வேண்டும் என்­பதை சிந்­திக்­கவும் வேண்டும் எனக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அஸ்­கி­ரிய பீட அனு­நா­யக தேரர் திவுல்­கும்­புரே விம­ல­தம்ம தேரர் கூறு­கையில், 

நாட்டின் ஆட்சி பெளத்த கொள்­கையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டாலும் கூட நாட்டின் நன்மை, மக்­களின் பாது­காப்பு என்ற விட­யத்தில் பெரும்­பான்மை மக்­களின் நிலைப்­பாடு, பெரு­ம­ள­வி­லான மக்­களின் எண்ணம் என்­ப­வற்றை கருத்தில் கொண்டு அதிக நன்மை ஏற்­படும் தீர்­மா­னங்­களை கையாள வேண்டும். 

ஜனா­தி­பதி பெளத்த தர்ம கொள்­கைக்கு அமைய நடந்­து­கொள்ளும் நப­ராக இருந்­தாலும் கூட இப்­போது சமூக நலன் கருதி சில தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளார். இதில் பாரிய சமூக விரோத குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டினை அவர் முன்­வைத்­துள்ளார். இதன் மூலம் நாட்டின் மோச­மான சம்­ப­வங்கள் குறை­வ­டைந்து அதன் மூல­மாக ஒழுக்­க­மான, அமை­தி­யான, அனைத்து மக்­களும் வாழக்­கூ­டிய சூழ்­நிலை ஒன்றி உரு­வாகும் என அவர் எண்­ணு­வ­தாக நாம் கரு­து­கின்றோம். 

அவ்­வாறு சட்ட ரீதியில் இறுக்­க­மான நகர்­வு­களை முன்­னெ­டுப்­பது அவ­ரது கட­மை­யாகும். ஆகவே சில சந்­தர்ப்­பங்­களில் மத கொள்­கைக்கு அப்பால் சமூ­க­நல நற்சிந்தனை எமக்கு வர வேண்டும். ஆகவே இவ்வாறு சமூகத்தை சீரழித்து மக்களின் அமைதியை கெடுக்கும் ஒரு சில  நபர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்படுவது சமூகத்துக்கு ஆரோக்கியமானதாக அமையும் என நினைக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58