அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அட்டன் - டிக்கோயா வனராஜா மேற்பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு தொகுதியில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டில் பரவிய தீயினால் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.