ஓய்வு பெற்றார் இந்திய அணியின் பறக்கும் வீரர்

Published By: Digital Desk 4

13 Jul, 2018 | 11:12 PM
image

இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த 37 வயதாகும் முகம்மது கைப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணிக்காக 13 டெஸ்ட்கள் மற்றும் 125 ஒரு நாள் போட்டிகள், முதல் தரப் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டங்களை குவித்தவர் முகம்மது கைப்.

2000 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவராக இருந்தவர். 2002 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையை வெல்வதற்கு மிகப் பெரிய பலமாக இருந்தவர் 

கைப். அந்தப் போட்டியில் 87 ஓட்டங்களை எடுத்து இந்தியாவுக்கு கோப்பையை வென்றுத் தந்தார். நாட்வெஸ்ட் கோப்பையை வென்று 16 ஆண்டுகளாகி உள்ள நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக கைப் அறிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கருக்காகவும் அவர் விளையாடியுள்ளார். கடைசியாக 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய அவர், ஐ.பி.எல் போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

அதிரடி நடுவரிசை துடுப்பாட்ட வீரராக விளங்கிய அவர், மிகச் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவர். தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் போன்று மைதானத்தில் பாய்ந்து சென்று பந்துகளை தடுத்து நிறுத்தி புகழ் பெற்றவர் கைப்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09