பதுளை - ஹல்தும்முல்லை, வங்கெடிகல மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கிய 10 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.

குறித்த 10 பேரும் இன்று வெங்கெடிக மலைப் பகுதியை பார்வையிட சென்றபோதே திடீரென ஏற்பட்ட காட்டுத் தீக்கு மத்தியில் சிக்கியுள்ளனர். இதன்போது அவர்களை மீட்பதற்காக தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து படை வீரர்கள் ஈடுபட்டதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் அறிவித்துள்ளது.